கடவுளின் விளையாட்டு

கடவுள் ஓர் கலைஞன்
பொருளிற்கு உருக்கொடுத்து
உயிர் கொடுக்கும் ஓர் சிற்பி
அவனால் உருப்பெற்று
உயிர் பெற்றவன் மனிதன்
சிற்பத்தின் தன்மையே
(மனிதனின் நிலமையே)
உலகின் புகழ் பெறக்காரணம்
களிமண்ணா.. உலோகமா..
(வறுமையா .. செல்வமா..)
இதனை நிர்ணயிப்பது - இல்லை
பூசப்பட்ட முலாமின் தன்மையா?
(உடலின் அழகா?)
இது கலைஞனின் வெளிப்பாடு.
(கடவுளின் விளையாட்டு.)