நானும் மழலையாக மாற ஆசை...
![](https://eluthu.com/images/loading.gif)
பணிக்காக காலையில் சாலையில்
செல்லும் போது - நான்
சந்தித்த இரு தேவதைகளின்
செயல்கள், உங்களுக்காகவும் ...
முதல் தேவதை
முகத்தில் முத்தான சிரிப்பு
அழகாய் தலை வாரி
மல்லிகைப்பூவை குடுமியில் சூடி - ஒரு
கையில் தன் தாயை பிடித்துக்கொண்டு
மற்றொரு கையில்
அவ்வப்போது அவ்மல்லிகையை
தொட்டும் தொடாமலும் - அதை
முகர்ந்துப்பார்த்தும்
புன்னகைக்கும் பிஞ்சுவை
பார்த்த போதும் - அவற்றை
நினைக்கும் போதும் - என்
மனம் ஏங்குகிறது நானும்
மழலையாகவே இருக்கக்கூடாதா ? என்று...
இரண்டாவது தேவதைக்கு
இறகு இருக்கும் என்று நினைக்கிறேன்
தலையில் சூடிய பூ
தவறி தரையை தட்டும் போது - தன்
தாயின் கையை இழுத்து - மீண்டும்
தலையில் வைக்கச் சொல்லி - அடுத்து
எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும்
மான் போல் துள்ளிக்குதித்து
மலர் கீழே விழுந்துவிட்டதா? இல்லையா? - என்று
தொட்டுப்பார்க்கும்
கள்ளம் கபடம் இல்லா
உள்ளம் அது - இந்த
வெகுளித்தனம் வெகுவாகவே - என்னை
மீண்டும் குழந்தையாக மாற
நினைக்க தோன்றுகிறது...
ஒவ்வொருடைய
மழலை பருவமும்
மங்காத பருவம்
மீண்டும் ஒருமுறை - வாழத்
தூண்டும் பருவம் அது...