முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம்

இத்திட்டம் குறிப்பாக ஏழை மக்களுக்கு அவர்களின் அவசர மருத்துவ செலவை கருத்தில் கொண்டு தனியார் மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்படும் நவீன மற்றும் உடனடி பல்வேறு வரையறுக்கப்பட்ட சிகிச்சைகளுக்கு ,மருத்துவ செலவை இத்திட்டம் மூலம் பெற ஏதுவாகிறது. இத்திட்டம் பெரும்பாலும் ஏழைமக்களின் நலனையே கருத்தில் கொண்டுள்ளதால் அவர்களின் ஆண்டு வருமானம் ரூ 72,000 க்குள் இருந்தால் இத்திட்டத்தின் பயனை அந்த குடும்பம் பெறலாம். அவசர சூழ்நிலைகளில் அனுமதிக்கப்பட்ட பிறகு கூட இத்திட்டத்தின் பயனை ஏழைமக்கள் சுலபமாக பெற அரசு வழிவகை செய்துள்ளது. ஆனால் அனுமதிக்கப்படும் மருத்துவமனையில் இத்திட்டம் ஒருங்கினைக்கபட்டுல்லதா என்பதை, அந்த மருத்துவமனையிலோ அல்லது இக்காப்பீடு திட்ட தகவல் பெற உருவாக்கப்பட்டுள்ள இலவச தொடர்பு எண்ணை அணுகி தெரிந்துகொள்ளலாம் ph 18004253993. அனுமதிக்கப்பட்ட பிறகு அம்மருத்துவமனையில் முதல்வர் காப்பீடு திட்ட திட்ட அதிகாரியை தொடர்பு கொண்டு, அனுமதி சீட்டை பெற்று உள்ளூர் கிராம நிர்வாக அலுவலகத்தை அணுகி (vao ) அவர்கள் கொடுக்கும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, குடும்ப அட்டை சான்று என சில அறிவுரைகளை பின்பற்றியபிறகு, கிராம நிர்வாக அலுவலரால் வழங்கப்படும், அச்சான்றிதழை மருத்துவமனையில் கொடுத்து, மருத்துவ செலவிற்கு ஆகும் பெருமளவு செலவை இத்திட்டத்தின் மூலம் பெறலாம். இத்திட்டம் ஒருங்கிணைக்கப்பட்ட மருத்துவமனைகள் பெரும்பாலும் பெயர் சொல்லும் பெரிய மருத்துவ மனைகளாகவும், அதிக எண்ணிக்கை கொண்ட மக்களுக்கு சிகிச்சை தரும் அளவிற்கு வசதி உடையதாகவும் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இத்திட்டம் ஒருங்கிணைக்கப்பட்ட மருத்துவமனைகளில் இதற்கென ஒரு அலுவலகம் உள்ளே இயங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களை அணுகியும் ஆலோசனை பெறலாம். பொதுவாக இத்திட்டத்திற்கு தகுதியுள்ள பயனாளர்கள் காப்பீடு அடையாள அட்டை பெற, குடும்ப வருமானத்தை உறுதி செய்து கொள்ள, உள்ளூர் தாலுகா அலுவலகம் மூலமாக வருமானசான்றிதழ் விண்ணப்பம் பெற்று கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர், தாசில்தார் ஆகியோரின் பரிசீலனைக்குப்பிறகு பிறகு வழங்கப்படும் ஆவணம் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் அசல் குடும்ப அட்டை மற்றும் நகல் குடும்ப அட்டை ஆகியவற்றை கொண்டு சென்று அந்த ஊருக்கு உட்பட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று,இத்திட்டத்திற்கு என பிரத்யேகமாக இயங்கும் அலுவலகத்தில் புகைப்படம், கைவிரல்கள் ரேகை போன்ற தனிப்பட்ட அடையாளங்கள் சேகரிக்கப்பட்டு ஒப்புகைசீட்டு வழங்கப்பட்டு ஓரிரு மாதங்களில் அடையாள அட்டை வழங்கப்படும். பல்வேறு தருணங்களில் பயனாளர்களின் தகவல்கள் நேரடியாகவே உள்ளூரிலேயே சேகரிக்கப்பட்டு அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பு: வருமான சான்று பெற விண்ணப்பிக்கும் போது அந்த விண்ணப்பத்தில் ரூ 10 மதிப்புள்ள நீதிமன்ற கட்டணவில்லை ஓட்ட அவ்விண்ணப்பம் விற்கும் நபர்கள் பணிக்கபடுகிறோம். ஆனால் ரூ 10 நீதிமன்ற கட்டணவில்லை அரசனையோ,சட்டவிதியோ,அவசியமோ இல்லை.

டாக்டர் வீ.ஆர்.சதிஷ்குமார்
சிட்லபாக்கம்

எழுதியவர் : டாக்டர் வீ.ஆர்.சதிஷ்குமார (20-Aug-13, 1:04 pm)
சேர்த்தது : Drvr Sathis Kumar
பார்வை : 124

மேலே