செம்மொழியாம் நம் தமிழ் மொழி ...!

எனக்குள் இருக்கும் உன்னை
நான் நினைக்கவேயில்லை ...!

வாழ்க்கையை காண எங்கோ தேடி
அலைந்தேன் இருந்தும் நான் தான்
நீ என்று வெளிபடுத்திய மொழி
நம் செம்மொழி ...!

எத்தனை முறை அடித்தாலும்
தாய் மடி தேடும் பிள்ளை போல
என்றும் உன்னை மட்டும் சேருவேன்
என் உயிர் உள்ள வரை ...!

தோல்வி கண்ட மனது
உன்னிடம் தஞ்சம் அடையும்
அப்பொழுது அனைவரும் கவிஞன்
தான் உன்னை பற்றி எழுதும் பொழுது ...!

நானும் உன்னிடம் தஞ்சம் அடைகிறேன்
எனக்கும் ஒரு விலாசம் தருவாயா
தமிழ் மொழிகொண்டு ...!

அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சாம்
இருந்தும் உன்னை அள்ளி அள்ளி பருகினாலும்
குறையாமல் பெருகும் செல்வம் நீ ...!

உலக அதிசயங்கள் பல உண்டு
இருந்தும் பலர் அதை கண்டதில்லை
உண்மைதான் இருந்தும்

இன்றும் நான் கருதும் ஒரே அதிசயம்
எம் தமிழ் மொழி மட்டுமே ....!

எழுதியவர் : ப்ரியாஅசோக் (20-Aug-13, 1:37 pm)
பார்வை : 3266

மேலே