இன்றைய விலைவாசி
அவனும் நானும்
வீதியில் செல்ல
சோரத்தில் பிடிபட்ட
அவளைப் பார்த்தேன்
நானோ அவள்
விபச்சாரி என்றேன்
அவனோ
ஓர் விதவை என்றான்
நான் விலை மாது என்றேன்
அவனோ அவள்
இன்றைய விலைவாசி என்றான்
வியந்தேன் வினாவினேன்
புரியவில்லை என்று
சொன்னான்
கடந்த ஒரு மணி நேரத்தில்
அவளின் பெண்மைக்கு
மூவாயிரம் ரூபா
செலுத்தினேன் என்று