தென்மேற்கு பருவகாற்று 555

என்னவளே...

அந்திமாலை தென்றல்
வீசும் வேலை...

ஆற்றங்கரையிலே...

உன்னை நான்
சந்திக்க வேண்டும்...

உன் விழிகளை
பார்த்த படி...

உன் மடியில்
சில நிமிடங்கள்...

தலை சாய்க்க
வேண்டும்...

தென்றல் விடும்
தூது போல...

உனக்கு ஓர் தூது
விடுகிறேன்...

தென்றலில் அல்ல...

வீசும் தென்மேற்கு
பருவ காற்றில்...

உனக்கு ஓர்
காகித தூது...

அந்திமாலை
ஆற்றங்கரை...

அழகே உன்னை காண
காத்திருப்பேன் நான்.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (22-Aug-13, 2:00 pm)
பார்வை : 136

மேலே