மன்னிப்பாயா தேவி

( இது சபலபுத்திக்கொண்ட ஓர் கட்டிட பொறியாளரின்
பெரும் வருத்தமிகு இரக்க விருத்தங்கள் )


மந்தனாய் இருந்தவனை மன்மதன் ஆக்கிய
எந்தன் செந்தாமரை தேன் மலரே ! – உந்தன்
முந்தானை மோகத்தில் என்னை முடிப்போட்டு
பத்துவிரல் பந்தாட பால்சொம்பு கொடுத்தவளே !

வேலைமுடித்து மாலை அனைவரும் போனாலும்
பூவை நீ மட்டும் போகாமல் – எந்தன் மன்மத
வித்தைக்காய் ஆவலோடு காத்திருந்து – இனிப்பு
தின்பண்டம்ப்போல் தினம் இன்பம் படைத்தவளே !

உன்னாசைக்கு அடிபணிந்தேனே தவிர உன்னன்புக்கில்லை
இராபூசைக்கு மலர்தந்தேனே தவிர நிஜவாழ்க்கைக்கில்லை
வெறும்உடலால் ஒன்றானேனே தவிர தரும்உயிராலில்லை
சிறுமடலால் மன்னிப்புக்கேட்டேனே தவிர மனதாரயில்லை

அய்யம்மில்லாமல் நாம் அந்நோந்நியமாய் பழகியதை- அந்த
அய்ம்பத்திரெண்டு கட்டிடங்களும் அசரீரி சொல்லும்மடி- அந்த

கட்டிடங்களுக்கு மட்டும் வாயிருந்திருந்தால் உன்னையெனக்கு
கட்டிவைக்கச்சொல்லி காவல் நிலையத்தில் கெஞ்சியிருக்கும்மடி

உத்தியோகத்தில் நான் உயர்ந்திருந்தாலும் – உன்மடியில்
மத்தியாணத்தில் தவழ்ந்து கிடக்கும்போது – உன்னொத்த
சகத்தோழிகள் ஒளிதிருந்து ஓரகண்களால் ஜாடைமாடையாய்
முகத்திருமகளின் மடியில் முதலாளியை பாரென்பார்கள் !

எனக்காகவே வாழும் உனக்காக நானென்ன செய்தேன் ?
கணக்குக்கோர் கைக்குட்டையேனும் வாங்கி தந்துருப்பேனா ?
இல்லை நீதான் என்னிடம் ஏதாவது கேட்டிருப்பாயா ?
அல்லது நான்தான் எப்போதாவது வர்ப்புறுத்தியிருப்பேனா ?

படம் பார்க்கக்கூட இடம் கொடுக்காமல் அல்லவா
அடமாய் அடம்பிடித்து அழுது தவிர்த்து வந்தாய் !
சிலவை சிக்கனமாகச் செய்யச்சொல்லி – எனக்கு
அளவை அளவாய் அளக்க கற்றுத்தந்தவளம்மா நீ !

இத்தனைக்கும் மேலாக எத்தனையோ என்சகாக்கள்
நித்திரைக்கு உன்னை அழைத்தப்போது, கால்செருப்பு
பிஞ்சிடும்மென்று எச்சரிக்கை செய்து ஆண்மகனாய்
அஞ்சாமல் நின்றாயே அதுவொன்றே போதும்மடி – நீ
வாழும் வாழ்க்கை ஏமாறாமல் இருப்பதற்கு ! – ஆனால்
வாழ்க்கை கொடுக்க வேண்டியவன் நான் ஏமாற்றிவிட்டேன்!

என்னை நம்பியிருந்த உன்னை - நீ பிள்ளை
தன்மை அடையும்வரை அனுபவித்து – உன்னிடம்
சொல்லாமல் கொள்ளாமல் ஊர் திரும்பிவிட்டேன்
நானில்லாமல் நீயங்கு புழுவாய் துடிதுடிப்பாய்
என்றறிந்திருந்தும் படுபாவி நானந்த பெரும்பழியை
சுமந்து வந்தேன்! என்னாவி பிரியும்போது
நிச்சயம் எனக்கு கொடும் நரகம்தான் !

**********************************************************************

எழுதியவர் : இரா.மணிமாறன், கைபேசி : (24-Aug-13, 5:32 pm)
சேர்த்தது : மாறன்மணிமாறன்
பார்வை : 53

மேலே