கானல் நீரில் மூழ்கிடுமா வாழ்க்கை ? -(கார்த்திக் )

மர்மம் நிறைந்த

வாழ்க்கைகுள்ளே

சிரித்தபடி செல்லத்தான்

ஆசைபடுகிறேன்

கானல் நீரால் எனது

தாகத்தை

தீர்க்க முடியாது

ஆனால் நகைச்சுவை

என்னவெனில் எனது

கண்களில் படுவதெல்லாம்

கானல் நீராகவே

இருக்கிறது

ஏமாற்றம் எனது

இயக்கத்தை

நிறுத்திவிடுமா ?

கானல் நீரில்

எனது வாழ்க்கை

மூழ்கிவிடுமா ?

தேய்ந்து முழுமையுற்ற

நிலவின் சக்தி

கடலை உறிந்துவிட

துடிக்கும்

விரைவில் எனது

வாழ்க்கையும்

முழுமை பெறும் !!!!!!

------------------------------------------------------------------
என்றென்றும் அன்புடன்
கார்த்திக்

எழுதியவர் : கார்த்திக் (திருநெல்வேலி ) (25-Aug-13, 5:05 pm)
பார்வை : 145

மேலே