விதைகள்

மனதில் விதைத்த
விதைகளை எல்லாம்
மண்ணில் விதைக்க முடியாது!
மண்ணில் போட்ட
உரங்களை எல்லாம்
மனதில் போட முடியாது!
மண்ணில் விதைத்ததை
எண்ணிடுவோம்!
மனதில் விதைத்ததை
மறந்திடுவோம்!
எண்ணியதெல்லாம்
விருட்சம் பெறலாம்...
மறந்தவையெல்லாம்
மறுபிறவி எடுக்கலாம்...
ஆதலால்,
விதைக்க கற்றுக்கொள்ளுங்கள்
விதைகள் விதைகளாய்
இருக்கும் போதே!


எழுதியவர் : யாசர் அராபத் (25-Aug-13, 7:57 pm)
சேர்த்தது : yazar arafath
பார்வை : 64

மேலே