மணமகன் தேவை
கிளிபோல் வளர்த்த என்
மகளை கூட்டில் அடைக்காத
மணமகன் தேவை ...!!!
குயில் போல் பாடும்
என் மகளை -எப்போதும்
பாடச்சொல்லி கேட்காத
மணமகன் தேவை ...!!!
மயில் போல் கூந்தலை
உடைய என் மகளுக்கு
மயிலே மயிலே ..
இறகு தா என்று கேட்காத
மணமகன் தேவை ....!!!
மொத்தத்தில் என் மகள்
எதை சொன்னாலும்
தலையாட்டும் தகுதி உடைய
மணமகன் தேவை ....!!!