குடி குடி

மங்கையரின் மனபாரந்தான்
மதுவருந்தும் மானிடன் நான்

புகையிளுத்தது என் பூவிதல்
பூ வைக்க மறந்தாள் என்னவள்
குடி மறந்து குடிக்கலானேன்- பிள்ளை
தாய் மடியில் துடித்து போனான்
"படிக்க
வந்து விட்டான் பிள்ளை
ஏடு வாங்க எட்டணா
எடுத்து குடுக்க முடியவில்லை
குடிகார அப்பனின் குடித்தனத்தை
எப்படி
சொல்லுவாள் இந்த கோழை!
பாடுபட்டதை மட்டுமின்றி
தோடினையும் விற்று விட்டான்
கேடுகெட்டவனை சாடுவதை தவிர
வேறென்ன செய்வாள் பாவம்
உடைந்த உடையில் கிடந்த தெய்வம்!

காலபோக்கில்
நடை பழகி கண்ணீர் மலையில்
முகம் கழுவும் கண்ணகிக்கு
கஞ்சிக்கென கெஞ்சும் பிஞ்சைக்
கண்டு உயிர் தங்கிடுமா நெஞ்சில்!
குடிசை கொற்றவனை கொத்திட கொதித்தால்!
மண்ணின் மனம் மனதில் எழ
மழுங்கி நின்று துடித்தாள்!

புலம்பி நின்றும் புலராத வெளிச்சம்
பெண்ணின் மன(ண)ம் எப்படி வீசும்
போதும்.. போதும்.. போதும் ..
எழுதும் பிள்ளை எழவில்லை
தவழும் முல்லை நினைவில்லை
களம் கண்டுவிட்டால் போல!
இந்த கள்ளன் மனம் மாற!
நிலவாய் வந்து விட்டால் போல
உத்திரத்தில் நின்றதனால!
ம்! ஹும்! ஹ்ம்ம்!"

பொழுதெல்லாம் சூதாடி
தள்ளாடி போனேனோ
நான் குடிக்கும் நாளிலவன்
கல்லாமல் போனானே
குடி குடியாய் குடிதேனே!
என் குடி நான் கெடுத்தேனே...!

எழுதியவர் : தர்மா (27-Aug-13, 2:32 am)
பார்வை : 46

மேலே