காதல் செய்வீர்!

கனவை அனுப்பி வைத்தாள்.
நினைவைத் தொடர வைத்தாள்.
தொடும் நினைவு துடிக்கட்டும்.
நெடுங் கனவு படிக்கட்டும்!
கனவுதான் காதலின்பம்.
நினைவுதான் அதற்கின்பம்.
கனவுத் தொடர் இனிக்கட்டும்.
நினைவு நாளும் மலரட்டும்.
நினைவு எட்டுந்தூரம் மட்டும்
கனவுங்கிட்டும் காலந்தொட்டும்.
நினைவுந்தொட்டு விளைந்திடலாம்..
கனவுங்கூடத் தொடர்ந்திடலாம்.
காதலே செய்யுவீர்!
காமம் மட்டும் விலக்குவீர்!
கல்யாணம் எட்டும் வரை
கட்டியேபோடுவீர்!.
கல்யாணஞ் செய்யனும்
காதலும் அதன் பின்னும்
காமம் உண்டு திகட்டனும்.
கடைசி வரை தொடரனும்.
காதலும் மோதலும்
கட்டாயம் தொடரலாம்.
ஆனாலும் குடும்பமும்
ஆனோமென உணரனும்.
அன்பும் அரவணைப்பும்
அதுதான் காதலென்றும்
பண்பு காத்து வாழ்ந்திட்டால்
பாரில் யார் அனாதைகள்
மனை மாட்சி செழிக்கவே!
வளமிணைந்து கொழிக்கவே!
கனவுகளாம் குழந்தைகளை
கல்வி சேர்த்துத் தழைக்கவே!
குழந்தைகளே செல்வமென
குதுகலமாய் வாழ்கவே!
மழலை மொழி இன்பமென
மனம் நிறைந்து வாழ்கவே!
கொ.பெ.பி.அய்யா.