எழுத்து இணைய நட்பே ...! நீ வாழி ....!!

முதல்கவியே
முத்தாய்ப்பாய்
முதலிடத்தில்
முன் நிற்க
முதல் மரியாதை
உன் கவிக்கு .....!!

நித்தம் பிறர் கவி படித்து
சத்தமின்றி கருத்துரைத்து
சித்தம் மகிழும் வண்ணம்
சின்னவிரல் சொடுக்கி
வழங்கிடுவாய் வாக்குகளை .....!!
சுழியம் இருந்தால்
சுதாவுக்குப் பிடிக்காதோ .....??

முகம் தெரியா நட்பே
அகம் குளிர வாழ்த்திடுவேன் ....!!
நல்லன எல்லாம் கைகூடி
நலமே வாழ்க ...!!

மகளே உன் வருகை
நாளும் விழி தேடும் .....
"முப்பொழுதும் உன் கற்பனைகள் "

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (28-Aug-13, 5:19 pm)
பார்வை : 187

மேலே