தமிழினத்திற்கு காலனின் சூழ்ச்சி!!!
காலன் - காலதேவன்
காலபைரவனென
கோவிலெழுப்பி தெய்வமாக
உன்னை வழிபடுமினம் எம்
தமிழினம் தானடா
இன்று நீயே எங்களுக்கு
எமனாகி பகைவனாகிவிட்டாயே
குமரிகண்டத்தை ஈழமென்றும்
தமிழ்நாடென்றும் பிரித்து எமினத்தின்
ஒற்றுமை காலத்தை சுருக்கினாய்
தனாட்சி காலத்தை சுருக்க
தமிழ்நாட்டிற்கு ஆரியர்களையும்
ஈழத்திற்கு அவ்வழி சிங்களவனையும்
ஏவினாய்
காலத்தை வென்று தமிழ்தேசத்தின்
இக்கரையிலிருந்து அக்கரையிலிருந்த
தேசம் வரை எமினத்தின் வீரத்தினால்
படையேடுத்தும் வாகைசூடியும்
புலிக்கொடியை நிலை நாட்டியதொடு
தோற்ற எதிரியிக்கு முடிச்சூடி
தனாட்சி உரிமையளித்த
எம் தமிழினம்
இன்று தமிழனென்று
எழுதவே உரிமையில்லை இவுலகில்
ஆரியர்கள் மற்றும் அவ்வழி
சிங்களவர்களின் எழுச்சிக்கு
3000 முதல் 2500 ஆண்டுயளித்த நீ
எமினத்தின் எழுச்சிக்கு ஏனடா
30 ஆண்டுகளாக சுருக்கி
சூழ்ச்சிட்டாய்
இவுலகின் காலம் கணிக்க
எமினத்தின் சுவடிகள்
அடித்தளம் - அவடித்தளத்திற்கு
அடித்தளமிட்ட எம் தமிழினத்தின்
எண்ணிக்கை குறைந்தது
வீரம் குறையவில்லை
உன் காலத்தை கணிக்க
அடித்தளமிட்ட எமினத்தின்
வீரத்தைகொண்டு
உன் காலச்சுவடியை வென்று
அக்காலச்சுவடியால் உன்
காலத்தை சுருக்கி
நீ ஏவியனொடு உன் பகைமையையும்
அழிப்போமடா நாங்கள்
இனி உனழிவின்
காலத்தை கணித்துக்கொண்டிருடா
என் அன்பு காலனே!!!
=== க.பிரபு தமிழன்