முகவரி தொலைத்த முகங்கள்

பாதம்
தழுவிய
புல்வெளி - ஏனோ
கான்க்ரிடு சாலைகளாய்
பறவையின் பாடல்களோடு
ரசித்த வேப்பந்தோப்பின் குளுமை
ஏசி அறையில் MP3
கேட்கும் போதும் கிடைக்கவில்லை
புழுதி படிந்து
புன்னகைத்து விளையாடிய
புந்தளிர்கள்
தொடுதிரையின் சிறையில்
குளியலும் கும்மாளமாய்
இருந்த ஆற்றின் குளுமை
இன்று
வெம்மை படிந்த பாலையாய்
திண்ணைவெளி
அரட்டை
இன்று
facebook status....
மார்கழி பனியின்
அழகிய மாக்கோலங்கள்
வீட்டு வாசலில்
அழியாத ஸ்டிக்கர் கோலங்களாய்
கடிதம் வரும்வரை
காத்து இருந்த தவிப்பின்
கால்தூசியை
உங்கள்
அலைபேசியின் ஓசையால்
நிரப்பிட இயலுமா ?
அயல்நாட்டுக்காரன்
எல்லாம் என்
முகநூல் நண்பர்கள்
அடுத்தவிட்டுகாரன் ஏனோ
அயல்கிரகவாசியாய்
கைகூப்பி
தொழுத தெய்வங்கள்
இன்று
கேமராவின் கிளிக்கில்
எறும்புக்கும்
விருந்திட
எங்கள் விருந்தோம்பல்
விருந்தினரை
அழைத்துவிட்டு பின்
வரும்படி என்றாகி போனது
அழகிய தாவணிகூட்டங்கள்
அழிந்துவரும் சித்தன்னவாசல்
ஓவியமாய்
உழைத்து களைத்து
உண்ட கம்மங்கூலின்
ருசி ....
இன்றைய
துரித உணவில்
கிடைபதில்லை
இருப்பினும்
நாங்கள்
சில நேரங்களில்
எந்திரங்களை இயக்கும்
எந்திரமாய்....
பல நேரங்களில்
எந்திரம் இயக்கும்
எந்திரமாய்....
சந்தோசத்தை தவறவிட்ட
சாதனை நாயகர்கள்