சாரல் காலம் IV
முத்தம் கேட்கிறேன்
வெட்கம் பூட்டுகிறாய்....
வெட்கப்படக் கேட்கிறேன்
முத்தங்கள் பூசுகிறாய்....
+++++++++++++++++++++++++++++++++++
வெண்கலச் செம்பு
விழுந்தோடியதில்
திடுக்கிட்டுத் திரும்புகிறாய்..
படபடக்கும் இமைகளும்
தேய்ந்துருளல் சத்தங்களுமாய்
கவிதையாய் நகர்கிறது
நிமிடங்கள்....!
+++++++++++++++++++++++++++++++++++++
பச்சைத் தாவணியில்
வரப்புகளிலேறிச் சிரிக்கிறாய்
புகைப்படத்திற்கு....!
இப்படித்தான்
நாமும் இருந்தோமென
ஏங்கியழுகிறது
வறண்டு வெளுத்த
புற்காடுகள்.......!
+++++++++++++++++++++++++++++++++++++++
தூக்கம் கலைந்து
சோம்பல் முறிக்கிறாய்
நீ....!
எப்படியும் தொட்டுவிட
முயன்று
தோற்றுப்போய் வீழ்கிறது
சாரல்...! பனித்துளிகளாய்
உன் வீட்டு
சன்னல் கண்ணாடிகளில்......!