@@@பாலைவனத்துப்பாலகன் ( மீள்பதிவு )@@@

பள்ளிபருவம் முடித்து
பள்ளிக்கொண்ட நாள்முடிந்து
பத்துக்கும் மேலான வருடமாயிற்று
பணம் புறட்ட நான் வந்து ...

கண்குளிரும் சொந்த நாடு விட்டு
கண் எரிக்கும் சூட்டில் பணிசெய்து
கண்ணீர் மல்க தனிமையில் நானே
கண்துடைத்த காலங்கள் நிறைய

அம்மாவின் அனுசரிப்பும்
அத்தான் என்ற அலங்கரிப்பும்
அப்பா என்ற இசயமுதும்
அத்துனையும் அனுபவித்தது
அழகான கைப்பேசியிலே

மாதம் பத்தில் பெற்றெடுத்த
மாண்புமிகு அன்னையையும்
மனைவியென வந்தவளையும்
மனம் ததும்ப விட்டு வந்த
மனம் நிறைய பாரம் உண்டு

காலங்கள் வெகுவாக உருண்டோடும்
காயங்கள் எல்லாம் காய்ந்து போகும்
காதல் செய்ய காலம் வரும்
காத்திரடி கொஞ்சம் என்னவளே

பிள்ளை முகம் பார்த்ததில்லை
பிஞ்சுவுடன் விளையாடவில்லை
பிள்ளயவனை பிரிந்திங்கு
பித்தனைப்போல் வாழ்ந்தாலும்

பார்த்துக்கொள் பத்திரமாய்
பாசமிக்க பேரன்தனை
பார்க்காத சொர்கத்தில்தான்
பாங்காய் வாழுகிறேன் நானம்மா

எத்தனையோ இன்னல்கள்
என்னுள்ளிருந்தாலும்
என்னால் வேண்டாம் சோகம்
என் சுற்றத்திற்கு என்றெண்ணி
என் வார்த்தையால் திருப்திசெய்தேன்

தீர்க்கமுடியா வேதனையை
தீராமல் நெஞ்சில் புதைத்து
தீயான வாழ்வையும்
தீட்சமாய் ஏற்று வாழ்கிறேன்

நித்தமும் நின் நினைவுகள்
நிஜங்களாய் கண்முன்வந்து
நிதானமாக நான் வாழ
நின்னை தாலாட்டவே

உங்கள் நினைவுகளில்
உணர்வுகளை உள்கொண்டு
உணர்சிகளை உள்ளடக்கி
உனக்காக வாழ்கிறேன்
உங்களை காணும் நாள் நோக்கி ...


...கவியாழினி...

எழுதியவர் : கவியாழினி (30-Aug-13, 1:20 pm)
பார்வை : 86

மேலே