நெஞ்சின் நினைவினில் நீந்திடுவாய் அலைபோல்
நெஞ்சின் நினைவினில் நீந்திடு வாய்அலைபோல்
மஞ்சள் நிலவினைப்போல் மாலை யிலேவருவாய்
அந்திப் பொழுதின் அழகினை அள்ளிவந்து
தந்துசெல் வாய்நீநித் தம்
நெஞ்சின் நினைவினில் நீந்துகின் றாய்அலைபோல்
மஞ்சள் நிலாவந்தாய் மாலையில் --நெஞ்சமெலாம்
அந்திப் பொழுதின் அழகினை அள்ளிவந்து
தந்துசென் றாய்நீநித் தம்