ஆவாரம்பூவை வாழ்த்துவோம்....வாங்க...

தாழ்வாரங்களின் சிதறல்களில்
ஆழ்ந்த அக்கறையுடன் -சிறிதும்
ஆரவாரமின்றி நாலாறு வாரம்
ஆவாரம்பூ அழகாய் செய்த பணி
யாரால் மறக்க கூடும் மண்ணில்...?
ஆவாரம்பூ மணமகளாகிறாள்...!!!


பகல் வெளிச்சமாய் பலரின்
படைப்புகளின் தெரிவு தேனீயவள் ..!
புகல் மொழி எல்லை மீறின் ...
புயலாய் சீறிய சினக்காற்றவள்-பலருக்கும்
அகல் சுடர் அவள் -தளத்திலேனது
மகள் அவள் .மணமகளாகிறாள்..!..

மஞ்சள் மணக்கும் :பூ பூரிக்கும்
மண்ணின் மங்கள இசை தவழும் :
கொஞ்சும் தமிழ் குமிழிடும் :
கொலுசுகள் கொப்பளித்து ஆர்பரிக்கும்
தஞ்சமென தமிழ்மகன் தோள் சாய்ந்து
தங்கமகள் மணமகளாகிறாள்..!..

பண்ணெடுத்து வாருங்கள் -பைந்தமிழின்
பல சொல்தொடுத்து வாருங்கள் -தமிழ்
வண்ணம் பூசி வாழ்த்து வாக்கியங்களின்
வகைபல வாரி வாருங்கள் வரிசையாய்
எண்ணமெலாம் தமிழ் நெடி கமழும்
எழுத்து தளத்தின் ஏந்திழையாள் வாழ்கவென்று..!!

இன்று போல் இன்பம் சூழ இல்லறம் தழைக்க
நன்றாய் என்றும் வாழ மணமகளாகிறாள்..!..
காலராகம் இசைக்கும் கருவிகளாய் உவகைக்
கோலமிடும் புள்ளிகளாய் மணமக்கள்
நாளும் தமிழாய் வாழ்ந்து வாரிசுகள் பெற்று
ஆலென தழைத்து அருகாய வேர் விட்டு வாழ்க...!!


கே .பிரியா எனும் ஆவாரம்பூ ஆற்றிய மகத்தான் "சிறந்தக் கவிதை தெரிவு "சிறப்பான -அன்றியும் -சிரமமான பணி ....மறப்பேன் இல்லை நான்....!!நீங்களும் தானே..

இன்னமும் சான்றிதழ்கள் எழுதிக் கொண்டுள்ளோம்...விரைவில் உங்களை வந்தடையும் என அறிக...

வாழ்த்துவோம் ஆவாரம்பூவை...!!


...

எழுதியவர் : அகன் (1-Sep-13, 10:36 pm)
பார்வை : 111

மேலே