பேதையின் குமுறல்
..."பேதையின் குமுறல்"....
( ம.........மௌ)
மணமாலை கழுத்தில் விழாதா என்று
மாதவம் செய்யும் மங்கையர் பலருக்கு,,
மிஞ்சி இருப்பது ஏமாற்றமும் இன்னும்
மீளாத வேதனையும் விரக்தியும் தான்...
முன்பு பூப்பெய்தியவுடன் திருமணம்... இன்றோ
மூலையில் விட்டத்தை வெறிக்கும் முதிர்கன்னிகள்...
மெருகேறுகிறது மனிதநேயம் மேல்நாட்டில்...
மேலோங்குகிறது ஜாதி கலவரம் நம்நாட்டில்...
மையிட்ட விழிகளுடன் மரகதமாய் ஜொலித்தாலும்,,,,
மொட்டுவிட்ட மலர் பூத்து மணந்தாலும்....
மோகன ராகத்தை ஏகத்தில் இசைத்தாலும்....
மௌனமாய் எக்களிக்கின்றது பாழும் சமுதாயம்.....
(மனிதநேயமிக்க சமூகத்தை உருவாக்கி முதிர்கன்னிகள் உருவாகுவதை தடை செய்வது வளரும் இளைஞர்களின் எண்ணங்களில் தான் இருக்கின்றது)
*******.........*********.........********.........*******