என்னால் வாழ முடிகிறதே!
*******************என்னால் வாழ முடிகிறதே ********************
கிரேக்க நாட்டின் தலை நகர் ஏதென்சு நகரம்
ஏதென்சு என்றவுடனே நம் நினைவுக்கு வருபவர்
தத்துவ மேதை சாக்ரடீஸ் !
சாக்ரடீஸ் ஒருமுறை ஏதென்சு நகரின் அங்காடித்
தெருக்களில் சுற்றிக்கொண்டே வந்தார் .
நாலைந்து தெருக்களின் உள்ளே நுழைந்து
கடைகளில் உள்ள பொருட்களையெல்லாம்
கூர்ந்து கவனித்துக் கொண்டே வந்தாராம் .
மறுநாளும் அங்காடித்தெருவில் நுழைந்து கடைகளில் உள்ளப் பொருட்களைக் கூர்ந்து
நோக்கியவண்ணம் நடந்து சென்று விட்டார்
இப்படியே ஒரு வாரமாக அங்காடித்தெருக்களில்
சுற்றிப் பார்த்து விட்டு ச் சென்று விடுவார்
ஏழாம் நாள் -சாக்ரடீஸ் அங்காடித்தெருவில் உலா வருவதை க் கண்டொரு கடைக்காரர்
"அய்யா நானும் கடந்த ஆறு நாட்களாக ப் பார்த்துக்
கொண்டே வருகிறேன் ,
கடைதெரு வழியே வருகிறீர்கள் ,கடையில் உள்ளப்
பொருள்களைப் பார்க்கிறீர்கள் , ஆனால் இது நாள்
வரையிலும் எந்தப் பொருளையும்
வாங்கவே இல்லை !உங்களுக்கு எந்தப் பொருள் வேண்டும் என்றால் நான் அந்தப் பொருளை
வரவழைத்துத் தருவேனே ?"என்று கேட்டார்
அதற்கு ,சாக்ரடீஸ் ,-
அன்புள்ளம் கொண்ட கடைக்காரரே இங்குள்ள
பல கடைகளில் உள்ளப் பொருட்கள் எவையும்
என்வீட்டில் இல்லை !
இந்தப் பொருள்கள் எவையும் இல்லாமல் என்னால்
வாழமுடிகிறதே!என்று எண்ணிப் பார்த்து
ஒவ்வொரு நாளும் மகிழ்கிறேன்",
எனக் கூறினாராம்
கடைக்காரன் வியந்து போய்விக்கித்து நின்று விட்டானாம் !
இதையறிந்துதான் ,
திருவள்ளுவர்
"யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்"--
,என்று திருக்குறள் எழுதினாரோ என் எண்ணத்தோன்றுகிறது அல்லவா?
இந்தத் திருக்குறளுக்கு ஒரு சிறப்பு
என்னவென்றால்
நம் இதழ் ஒட்டாது !
***ஆதாரம் ---------;நீங்காத நினைவுகள்.
அறிஞர் மீ.ப.சோமு
மீண்டும் இந்தக்குறளை உச்சரித்துப் பாருங்கள்
இதழ் ஒட்டாது என்பதை உணர்வீர்கள்!