பார்போற்றும் அன்னைக்கு ஓர் பக்திப்பயணம்

ஆகஸ்டு வந்தாலே , அன்னையின் ஞாபகமே..!

காவித்தரித்து , கடும் விரதமிருந்தும் ,

அன்பர் இயேசுவின் உன்னத வரங்களை ...

ஆரோக்கிய அன்னையின் வழியே பெற்றிட்ட

மகிழ்வினை மனமுவந்து நன்றியறிவிக்கவும்,

நீண்டநாள் ஈடேறாத எண்ணங்களை

நிறைவேற்ற வேண்டியும் ஜெபமாலை தரித்து ,

அனுதினம் திருப்பலி அனுசரித்தும் ,

அன்றாடம் செபமாலை செய்தும்,

மன்றாட்டு மாலையை மலரோடு சமர்ப்பித்தும்,

நவநாள் செபத்தை நாயகிக்கு அர்பணித்தும்,

இறைபாடல்களை இன்பமாய் தியானித்தும்,

அன்னையின் உன்னத பிறப்பினை ஊரரறிய

பார்புகழ பறைசாற்றும் பக்தர்களாய் ...


நடைபயணம் மேற்கொள்ளும் வழியெல்லாம்

நன்னடத்தையால் , பக்தி முயற்சிகளால்,

வழியெங்கும் காண்போரின் உள்ளதை

கரைத்திடும் நல்லதோர் வீணையாய்...


வியர்வை சிந்தும் நடைபயணமும்,

மரத்தோர தென்றலின் மெல்லிய

தாலாட்டினால் அடர்ந்த தூக்கமும்,

சிறு உணவகங்களில் பெரும்பசியாற்றலும்,

எதிர்பாராத திருப்பமாய் புதியநட்புகளை சுவாசிப்பதும்,

பாதுகாப்பற்ற பயணத்தை அன்னையின் பக்தியோடு

அணுவணுவாய் அணுகுவதும் ..... அப்...பப்...ப்பா...

ஒவ்வோர் நிகழ்வும் ஆன்மீக வ(லி)ழியுணர்த்தும்,

ஆனந்த, ஆரோக்கிய,அற்புத,அழகிய அனுபவமே...!!!



எண்ணிய எண்ணங்கள் ஈடேறவும்,

வண்ண கனவுகள் நனவகவும்,

ஆரோக்கிய வாழ்வு மெல்லிய மலராய்,

மேனியெங்கும் படர்ந்திடவும் ,

ஆரோக்கிய அன்னை தமது

அன்பு மகனிடம் பரிந்துபேசி

தொடர்ந்திடும் வரங்களையும்,

வளர்ந்திடும் ஆரோக்கியத்தையும்,

வாழ்வு முழுக்க வழங்கிட பிரார்த்திப்போம்...



**ஆரோக்யா ** இடையாற்றுமங்கலம், திருச்சி...

எழுதியவர் : ஆரோக்யா (6-Sep-13, 1:09 am)
சேர்த்தது : ஆரோக்ய.பிரிட்டோ
பார்வை : 450

மேலே