ஒரு கணவன் மனைவியின் உரையாடல் ...
கணவன்: கல்லானாலும் கணவன்
புல்லானாலும் புருஷன்
புருஷனை மதிக்க கத்துக்கோ ..
மனைவி: மாளிகையானாலும் மனைவி
மண்ணானாலும் மனைவி..
மனைவியை புரிஞ்சு நடந்துக்கோ ..
கணவன் : இந்த மாதிரி வாய் உள்ள
பேய்யுன்னு தெரிஞ்சு இருந்தா
உன் கழுத்திலே தாலியை
கட்டி இருக்கவே மாட்டேன் ..
மனைவி : இந்த மாதிரி பொறுப்பு இல்லாத
ஆளுன்னு தெரிஞ்சு இருந்தா
கழுத்தையே நீட்டி இருக்க மாட்டேன்
கணவன் : உங்கப்பன் உன்னை என்ன
வக்கீலுக்கா படிக்க வைச்சான் ?
இப்படி ஏட்டிக்கு போட்டி பேசறே..
மாணவி : வக்கீலுக்கு படிக்க வைச்சு இருந்தா
வக்கில்லாம உன்னை ஏன் கட்டி
வைச்சு இருப்பார் ?
மகன் :இடையில் புகுந்து யப்ப்போவ்
யம்மோவ் ... போதும் நிறுத்துங்க
கொஞ்சம் பொறுங்க.. நான்
வக்கீலுக்கு படிச்சுட்டு
உங்களுக்கு விவாகரத்து வாங்கி
தரேன் .. என் முதல கேஸ்
கண்டிப்பா வெற்றி தான் ..
கணவன் மனைவி : ?????????????????
கருத்து: இல்லத்தில் கருத்து வேறுபாடுகள்
இருந்தால் தான் அது
இயற்கையான இல்லற வாழ்க்கை
இல்லாவிட்டால் அது
அனுபவம் இல்லாத போலி வாழ்க்கை
வாழ்க்கை ஒரு முறை தான்..
வாழுங்கள் வீழாமல்......