மழையில் நனையலாம்
மழையில்
நனையலாம்
ஆடலாம் பாடலாம்
நீர்த் துளிகளை கையிலேந்தி
விளையாடலாம்
எதிர்பாராது வந்த
கோடையின் இனிய வருகை
அழையாது வந்து
விருந்தளித்த வான் வள்ளல்
வண்ண மழை
வானவில் கோடு போடும் முகிலிடை
இந்த இயற்கைப் பிரியாவின் நெஞ்சினில்
சில்லென்று ஒரு கவிதை பாடும்
நீங்களும் நனையலாம்
ஆடலாம் பாடலாம்
நீர்த் துளிகளை கையிலேந்தி
விளையாடலாம்
குடையை விட்டெறிந்து விட்டு
குதுகலமாய் நடக்கலாம்
~~~கல்பனா பாரதி~~~