@@@ பந்தம் சிறக்க பாசத்தின் வாழ்த்து @@@

பாசத்தால் உயர்ந்தவள் -மன
நேசத்தால் சிறந்தவள்
உள்ளத்தால் தூய்மையானவள்
எண்ணத்தில் எழுச்சி கொண்டவள்

குரலில் குயில் தோட்கும்
பேச்சில் மழலை கொஞ்சும்
கற்கண்டாய் இனித்திடும்
கன்னியிவளின் நட்பு

மனதின் ஆசைப்படி மன்னவன்
மணமுடிக்க வந்திருக்க
மங்கையிவள் மணவரம்
காண்கின்றாள் மகிழ்ச்சியோடு

இல்லறம் இனிய நல்லறமாக
இவளின் மனம் புரிந்த
மணவாளனோடு மனைவியாக
மகிழ்ச்சியோடு தொடங்கிட

மணக்கோலம் கண்முன் கண்டு
மனம் நிறைந்த மகிழ்ச்சியில்
மனமாற வாழ்த்துசொல்ல
மனம்கொண்ட தங்கையிவள்

அருகில் இல்லையென்றாலும்
என் மனத்தின் நினைவுகள்
நிறைந்த மகிழ்ச்சியில் உங்களோடு
இனிய திருமண நல்வாழ்த்துக்கள்
வாழிய வாழிய பல்லாண்டு!!!

(எழுத்து தள சகோதர தோழி ப்ரியா அக்காவிற்கு நம் எழுத்துதளம் சார்பாக மனம்நிறைந்த திருமண நாள் வாழ்த்துக்கள் )

...கவியாழினி...

எழுதியவர் : கவியாழினி (8-Sep-13, 1:46 pm)
பார்வை : 283

மேலே