காதல் - (சொல்லா தருணத்தில்)

ஒன்றல்ல எண்ணங்கள்
ஓராயிரம்...
எதைத்தான் மறைக்க முடியும் - உன்னிடத்தில்
ஏனெனில் நானில்லை - என்னிடத்தில்...
ஏதேதோ எண்ணங்கள்
எண்ணத்தில் அலைபாய - எதைத்தான்
எழுத முடியும் - இவ் வண்ணத்தில்...
கரையேறத் துடிக்கும்
என் எண்ணத்தை,
எதைக் கொண்டு தடுப்பேன்
உன் நினைவலையை...
போதும் கண்ணா இந்த ஜென்மம்,
இன்றோடு முடிவதல்ல இந்த பயணம்...
வா என்று அழைக்க உன்னிடத்தில் வார்த்தையில்லை... - நான்
உன்னுடன் வர என்னிடத்தில் நானுமில்லை!...
என்னதான் காரணம் சொல்லி மறைத்தாலும் -
மறையாது உன் நியாபகம்,
என்னுடன் தான் இத்தனை ஏக்கங்களும்
என்றிருந்த எனக்கு - புரிய வைத்தாய் -
ஓர் இனிமையான தருணத்தில்....
இது போதுமெனக்கு;
உன்னுள் தான் நான் இருக்கிறேன்
என்னில் நீ போல.....