பறக்கத் தெரிந்தால்
பறவைகள் பறப்பதால்
பறவை எனக் காரணமோ...?
வானத்தை அமைதியாய் ரசிக்கின்றது
மையிட்டக் கண்களால் வட்டமிட்டே ....!
வாழ்க்கை வானம் குத்தகை விண்ணிலே
எத்திசையிலும் வெட்ட வெளியிலெங்கும்
சந்தோசம் மண்ணில் அல்ல என்று
சிவப்பு வானம் விடை கொடுக்கும் வரை...!
சந்தோசமாகப் பறக்கின்றது
ஆதி முதல் அந்தி வரை
கண்டம் விட்டு மா கடல் தாண்டியும்
நாடு விட்டு நகரை விட்டும்
இலவச பயணம் விசா இன்றியே...!
அடடா...! எத்தனை வண்ணங்கள்
எத்தனை எத்தனை கொட்டுகிறது
வானவில்லிடம் கை கோர்க்க
அழகு அத்தனையும் கண்களுக்கு
விருந்தாய் கண்கொள்ளா காட்சியடா..!
எதைக் கொண்டு வந்தோம்
எத்தனை விட்டு வைத்தோம்
எதனைக் கொண்டு செல்வோம்
பறவைகளின் கூட்டம்
நம் வாழ்வின் பாடமடா...!
நம் சிந்தனை எண்ணங்களோடு
வண்ணக் கனவுகளோடும்
நிஜமாகவே ஒப்பிட்டுப் பார்த்தால்
அதன் பாதை விசாலமடா..!
அதன் பாதையில் விதிகள் இல்லை
விபத்துகளும் இல்லை
யாரையும் அழிப்பதில்லை
யாரையும் பின்பற்றுவதும் இல்லை
யாரைப் பற்றியும் கவலை இல்லை
எப்படியடா...அதற்கும் மட்டும் ...!
பசித் தால்தானே அதற்கு
இரை தேடும் எண்ணங்கள்...!
களைத் தால்தானே அதற்கு கூடு
தேடும் எண்ணங்கள்... !
சுதந்திரமாய் பறப்பதுதானே
அதற்கு சந்தோசம் நிஜத்தின் அதிசயம்
நம் கண்கள் விரிகிறதே..! அதனைக்
காணும் போதெல்லாம் ...!
நமக்குக் கற்றுத் தருகிறதடா
சிறகுகளுக்குள்ளே எண்ணங்களை
எண்ணச் சிறகுகளாய்
முளைக்கின்றதே சிறகை விரித்தே ...!
பறக்கின்றதே அமைதியாக
சுதந்திரத்தைத் தேடி...
வியக்கிறேன் எனக்கும்
சிறகு முளைத்திருந்தால்..?
பறக்கத் தெரிந்தால்...?
களிப்பூட்டுதே எனக்குள் ...!