சிந்திப்போம் இனியேனும்

​நாம் இருவர் நமக்கு இருவர்
அரசின் கொள்கை அக்காலம் !
இருவர் மட்டுமே நிலையாய்
இங்கே இரட்டைப் பிறப்பாய் !

தனியே நின்றால் கேட்டிடுவர்
பனைமரமாய் ஏன் நிற்பதாய் !
ஒருவரே இங்கே இருவராய்
ஓட்டிப் பிறந்த மழலைகளாய் !

இருவரைத் தாங்கிடும் தாயோ
மண்ணில் மறைந்த வேரோ !
ஒன்றாய் வளர்ந்த பிள்ளைகள்
ஒருமித்து நிற்பதே அதிசயமே !

மரங்கள் கற்பிக்கும் பாடந்தான்
மாற்றான் நம்மை சீண்டுவான்
மனமும் மாறி வெட்டிடுவான்
மரணம் வரை ஒன்றாய் நிற்போம் !

மரத்தின் மனதில் தோன்றுவது
மனிதன் மனதில் இல்லையே !
சிந்திப்போம் இனியேனும் நாம்
சீர்படுவோம் சிந்தையால் நாமும் !


பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (11-Sep-13, 8:32 am)
பார்வை : 121

மேலே