அந்தி -(அஹமது அலி)
வான் சறுக்கி
விழப் பார்க்கும் ஆதவனை
ஏந்தி நிற்கும் கடல்!
))))))
அலையலையாய்
அலைகள் வைத்த கோரிக்கைக்காய்
கடல் குளிக்கும் எழில்!
))))))
கிழக்கே கிழித்தெழ
மேற்கே முக்குளிக்கும்
கிரணன்!
))))))
பகலின் விளிம்பில்
படுக்கப் போகும் பகலவனுக்கு
சிவப்புக் கம்பள வரவேற்பு!
))))))
இரை தேடச் சென்ற பறவைக்கு
கூடு திரும்ப அழைக்க வானில்
மஞ்சள் கொடி!
))))))
நட்சத்திர சமிஞ்ஞையில்
நாள் முடியப் போகிறதென்று
அறிவிக்கத்தான் அ(வ)ந்தியோ.!?