இளம் விதவையின் போராட்டம்

தாராத தனிமையிலே
தரனியே கழித்திருக்க
காலமெல்லாம் கண்ணீர் உடன்
கனமான கவலையை
நான் பெற்ற செல்வத்துகாய்
தனகத்தே கொண்டு- உள்ளம்
அடை கொண்டு- எந்தன்
ஓர் ஆண்டு வாழ்த்த வாழ்க்கை
ஒய்யாரமாய் போனதென்று
காலனவன் கண்பட்டு
கந்தல்லாய் போனதேனோ
சீர் பெற்று வளர பிள்ளை
செல்வமது இல்லா
விடினும் நான் பெற்ற
பிள்ளை தன்னே நாவுயர வாழ்த்தி
பேசுற வைக்கும் எண்ணம்
கானகத்தே போகும் முந்தன்
கண் கொண்டு பார்க்கை செய்வேன்
என் கொண்டு வளர்கையிலே
ஏழன பேச்சு நிறைய
என் சொந்தம் வந்து தங்கி சென்றால்
ஏழெட்டு வதந்தி சமூகம் தன்னில்
இவ் வதனை கொண்டு
என் வாழ்வில் அமைதி தனை
கொண்டுவர எண்ணம் கொண்டு
என் சமூகமே உன் பார்வையில்
என் வாழ்கையை போற்றிவிடு

எழுதியவர் : (11-Sep-13, 11:19 am)
சேர்த்தது : அருண்
பார்வை : 76

மேலே