என்ன பயன்?

அடிமுட்டாள் சாகிறது போல
அறிவாளியும் சாகிறான்
அப்ப அறிவாளிக்கு
அறிவு இருந்து என்ன பயன்?

அனைத்து செயலுக்கும் ஒரு காலமுண்டு
ஆண்டவன் வகுத்தபடி
அப்ப வருத்தப்பட்டு
அனைவரும் துன்பப் படுவதினால் என்ன பயன்?

அனுதினம் பாடுப்பட்டு சேர்த்த பணம்,பொருளை
அதிகாரத்துடன் இன்னொருத்தன்
அநுபவிக்கிறான் கடினப்படாமல்,
அப்ப பணம்,பொருளை சேர்த்து வைத்து என்ன பயன்?

ஆண்டு நூறு வாழ்ந்தலும்
அரிதாய் பிறந்த மனிதன்
அகிலத்தில் ஒரு நன்மையையும் காண்பதில்லை;
அப்ப இவ்வுலகில் வாழ்ந்து என்ன பயன்?

பயன் ஒன்றுண்டு என்றால் – இந்த
பாரினில் மகிழ்ந்து பிறருக்கு கொடுத்து
பணிவுடன் வாழ்வதை தவிர - வேற எந்த
பயனும் இல்லை

-----------------------------------

நாம் போம் அளவும்
எமக்கு என்" என்று இட்டு உண்டு இரும் (ஔவையின் நல்வழி)

எழுதியவர் : ஔவைதாசன் (12-Sep-13, 10:23 am)
பார்வை : 103

மேலே