காத்திரு கண்மணி
உன் ஈர விழிகள்
என் கோர உருவை
அடிக்கடி ஓரம் பார்ப்பதேன் ?
அழகில்லாத ஆண்மகன் நான்!
அரிதாரம் பூசாத கட்டழகி நீ !
என் அறிவு களஞ்சியத்தை
அறிந்துக்கொண்டு அதற்காகவே
என்னை அடைய துடிக்கிறாய் !
அது எனக்கு நன்றாக புரிகிறது
இருப்பினும் உன்னை மறுதலிக்கிறேன்
ஏன் தெரியுமா ?
எழுத்துலகில் இன்னும்
முழு எழுச்சிப் பெறாத என்னை
உன் பாலியல் பலாத்க்காரம்
பெண் அடிமை ஆக்கிவிட்டால்..?
அப்புறம் நான் எழுத்துலகில்
எழுச்சிக் கொள்வதே மிக கடினம்!
இதை நீ விரும்புகிறாயா ?
நிச்சயம் விரும்ப மாட்டாய் !
ஏனெனில் ? மணிமேகலையின்
அட்சயப் பாத்திரத்திற்கு இச்சமூகம்
எவ்வளவு மரியாதை கொடுத்ததோ..
அவ்வளவு மரியாதையை
என் ‘பா’-திறத்திற்கும் இச்சமூகம்
கொடுக்கின்ற காலம் வரும்வரை
நீ காத்திருந்துதான் ஆக வேண்டும்!
ஆகையால்
காரியத்தில் கண்ணாக இருக்கும் என்னுள்
காமத் தீயை அடிக்கடி மூட்டாதே !
அதற்காக
கையால் ஆகாதவன் இவனென்று
எள்ளளவும் நினைத்து விடாதே !
கலைவுலகம் என் கருத்துக்களை
கண்ணாடிப் பிரேம் போட்டு
அழகு பார்க்கும் காலம்
வெகு தொலைவில் இல்லை ;
அப்போதுப் புரியும் உனக்கு
நான் காத்திருக்கச் சொன்னதின் அவசியம் !