கலங்காதே காதலனே நான் கல்லறையில் 555
என்னவனே...
என் கரம் பற்ற வா என்ற
என்னை காகவைதாய்...
ஓடிவரும் தொலைவில்
நீ இல்லாததால்...
வேறொருவரின் கரம் பற்ற
என்னில் மனமில்லை...
மனதில்
உன்னையும்...
நிஜத்தில்
வேறொருவரை...
மணந்து வாழ
முடியவில்லை...
உன் நினைவுகளை
அணைத்தபடி...
உன்னை நெஞ்சில்
சுமந்தபடி...
நான் கல்லறையை
சுமக்கிறேன்...
மறுஜென்மம் இருந்தால்
பிறப்பேன்...
உன்னுடன் இருப்பேன்
உன் மழலையாக...
எனக்காக ஒருபோதும்
கலங்காதே...
என் காதலனே...
மணம் கொண்டு
நீ வாழ வேண்டும்...
நீ கலங்கினால்...
என் கல்லறையும்
கலங்குமடா...
உன் விழிகளை
பார்த்து...
உன் மனதில் நான்
நீங்காமலிருப்பேன்...
உன் மண வாழ்க்கையில்
உன்னுடன் இருப்பேன்...
உன் மழலையாக...
என்னவனே
கலங்காதே...
நீ மணமுடித்து வாழும்
உன் மணவாழ்கையில்தான்...
நம் காதல் வாழும்
உலகம் முடியும் வரை...
உன் கைகளில்
உன்னவளடா...
உன்னவளின் இறுதி
ஆசையை...
நிறைவேற்றுவாயா
என் காதலனே.....