விமான பயணத்தில் ஒரு .....!

( இது சொல் அரங்கங்களில் கேட்டவை . என்னுடைய சொந்தத படைப்பல்ல )

பன்னாட்டு பயணிகளுடன் மண்ணிலிருந்து விண்ணை நோக்கி சீறி பாய்ந்த சிறுது நேரத்தில் விமானம் வானிலே அழகாக சென்று கொண்டிருந்தது . பறந்துகொண்டிருக்கும் போது ஒரு அவசர அறிவிப்பு ஒலித்தது .
விமானத்தின் எடை அதிகமாக இருப்பதால்
பாதுகாப்பான பயணத்திற்கு ஒருவர் புறத்தே குதிக்கவேண்டும் என்று !
அறிவிப்பு நிற்கவே , ஒரு உயிர் போனாலும் மீதி உயிர்கள் வாழும் என்பதால் , ஒவ்வரு நாட்டவரும் முந்திக்கொள்ள ஜப்பானியன் அதை பெருமையாக கருதி ஜப்பானுக்கு ஜே என்று சொல்லி குதித்தான் வெளியில் !

சற்று நேரத்திற்கு பிறகு மீண்டும் அதே அறிவிப்பு வர , கொரியகாரன் கொரியாவிற்கு ஜே என்று சொல்லி சாடினான் வெளியில் !

நன்றாக பறந்துகொடிருக்க மீண்டும் அதேஅறிவிப்பு . நாட்டின் பெருமையை காப்பதற்காக
துணிந்தான் இந்தியன் ! இந்தியாவிற்கு ஜே என்று அழகுடன் முழங்கி , பக்கத்தில் இருந்த
பாகிஸ்தான் நாட்டவனை தூக்கி வெளியில் யறிந்தான் . மீண்டும் ஒரு ஜே கேட்டது ....!!!


நட்பில் nashe

எழுதியவர் : nashe (16-Sep-13, 12:08 am)
பார்வை : 136

மேலே