கருகிப் போகட்டும் காழ்ப்புணர்ச்சிகள்.....!

விடிகாலையின் கோலம்
விரிகின்ற புது மலர்கள்

விசாலமான சிந்தனையில்
விரும்பப் படும் பல உயிர்கள்

கசப்பென்பது விழி அறியுமோ ?
காணும் மனம் கட்டளையின்றி...!

கருணையை மனசில் வைத்தால் இனி
கசப்பென்பதும் இனித்தே இருக்கும்...!

எழுதியவர் : ஹரிஹர நாராயணன் (17-Sep-13, 11:30 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 72

மேலே