அறிவை பெருக்கி அறிஞராக்கும்
எழுத்துக்கள் கோர்த்திட்ட அச்சுக்கள்
எண்ணங்களை வடிக்கும் பக்கங்கள்
வாசித்திட வசதியாய் பதிப்புகள்
வாழ்ந்திட உதவிடும் புத்தகங்கள் !
வாழ்க்கைத் துணைவியாய் நூல்கள்
வசித்திடும் இடங்கள் நூலகங்கள் !
பட்டங்கள் பெற்றிட வழிவகுக்கும்
பதவிகள் உயர்ந்திட துணைபுரியும் !
அறிவை பெருக்கி அறிஞராக்கும்
செறிவை கூட்டி செமைபடுத்தும் !
பகுத்து அறியும் படகில் பயணிக்க
தொகுத்து வழங்கும் துடுப்புகள் !
இளைஞர்களின் இதய தோட்டங்கள்
இணைக்கும் பாலமாய் புத்தகங்கள் !
கல்விக்கூடத்தில் கால் பதிக்காமல்
கற்பிக்கும் பள்ளிகளே நூலகங்கள் !
ஏழை பணக்காரன் என்றும் சமமே
வறியோர் வசதியோர் ஒன்றே இங்கு !
நாளேடு நாவலுடன் நான்குவிதமுடன்
நுண்ணறிவு பெருக படித்திடுக நூல்கள் !
திரை அரங்கின் வாசலில் நிற்பதைவிட
நூலகத்தின் வாயில் சென்றாலே சிறப்பு !
அறிவுப் பெட்டகங்கள் அடங்கிய சுரங்கம்
அடுக்கி வைத்துள்ள அருமை புத்தகங்கள் !
பழனி குமார்