என் காதல் சிசுவே

என்,
மூச்சு காற்றின்
உஷ்ணம் உயர்ந்ததில்...
கண் இமைகளின்
இசைவு அதிகரித்ததில்...
இதய துடிப்பின்
எண்ணிக்கை வளர்ந்ததில்...
அறிந்து, பூரித்திருந்தேன்!?
நீ என்னுள் பிறந்திருப்பதை...
யாரும் அறியாமலே...

என்,
மூச்சு திணறியத்தில்...
இதய துடிப்பின் ஒலி வலித்ததில்...
இமை மூட மறுத்ததில்...
அதிர்ந்து, உறைந்திருந்தேன்!?
நீ என்னுள்ளே இறந்திருப்பதை.
யாரும் அறியாமலே...

எழுதியவர் : தென்றல் இளவரசி (24-Sep-13, 11:23 am)
Tanglish : en kaadhal sisuve
பார்வை : 60

மேலே