அட்சய பாத்திரம்

ஆயிரக்கணக்கில் தந்து விட்டது
ஆ மா புள் இனங்கள்
இன்னும் காணவில்லையே
பல போதி மரங்களை த்தான் ...!

கொண்டு வரப் பட்டோம்
இரண்டு பேரால்... .
கொண்டு செல்கின்றோம்
நான்கு பேரால்...!

விளக்கு பிரகாசிக்கின்றது
கோயில் தீபம் மட்டும்
அணைந்து விட்டதே
தாய் குத்து விளக்கின்
அன்புக் கோயிலில்...!

முதல் குழந்தை தான்
நம் தாய் வீடு
இரண்டாம் குழந்தைதான்
நம் புகுந்த வீடு என
வகுத்தது நீதி
பெண்ணிற்கு மட்டும்...!

சித்திரையில் பிறந்தால்
வயிற்றுப் பிள்ளையாம்
நித்திரையில் பெற்றால்
தத்துப் பிள்ளையாமோ !

தாயில்லாப் பிள்ளைகட்கு
அவனியில் இன்றும்
வாயில்லாப் பிள்ளையாம்
பசி பிணியில்லாமையே...!

சித்திரைக் கடலில்
பெற்றெடுத்த முத்து
வற்றியக் குளமாய் ஆகா
அட்சய பாத்திரமாம் ...!

எழுதியவர் : தயா (25-Sep-13, 4:06 pm)
பார்வை : 379

மேலே