பேனாவின் குமறல்

நான்.......

நான்
ஒரு
கவிதை எழுதிக் கொண்டிருந்தேன்

ம்ம்
அது...

அது
ஒரு காதல் கவிதை

கவிதைகள்
எனக்கு அறிமுகம் இல்லாது
இருந்த காலத்தில்
அந்த கவிதை
என்னுடைய முதல் கவிதையாக
அதிலும்
காதல் கவிதையாக மலர்ந்தது.

அந்த கவிதை
மலர்ந்த நொடியிலேயே
நான்
அந்த கவிதையின்
முதல் ரசிகன் ஆனேன்

அந்த கவிதையில்
இருந்த வார்த்தைகள்
என் மனதில் தோன்றிய
வார்த்தைகள் இல்லை
அது…..
அந்த கவிதை
எனக்கு பரிசாக அளித்த வார்த்தைகள்

அந்த கவிதையை
நான் எழுதிக்கொண்டிருந்த
வேளையில்
என் மனதில் தோன்றிய
உற்சாகத்திற்கும்
சந்தோசத்திற்கும்
அளவே இல்லை

“அகத்தின் அழகு முகத்தில் தெரியும்” என்பார்கள்.
என் முகத்தைப் பார்த்து
யார் என்ன தெரிந்துகொண்டர்களோ தெரியாது.
ஆனால்,
நாஆன்
கவிதை எழுதிக்கொண்டிருக்கிறேன் என்பதை
யாரும் அறிந்திருக்கவில்லை.

நான்
அந்த கவிதையை
எழுதி முடிப்பதற்கு முன்னமே
கவிதை
என்னை
தொலைத்துவிட்டுச் சென்றது.

என் இயலாமை
கவிதை தானாக என்னை வந்து சேராத என்று
ஏங்கச் செய்ததே தவிர
தேடும் முயற்சியில் என்னை ஈடுபடுத்தவில்லை.

அன்றிலிருந்து
நானாக கவிதைகள் எழுத நினைத்தாலும் முடிவதில்லை
காரணம்
என் முதல் கவிதை போல்
எந்த கவிதையும்
அழகான வார்த்தைகளை
எனக்கு பரிசாக அளிக்கவில்லை.

கவிதைக்காக காத்திருந்த எனக்கு
அதிர்ச்சியான செய்தி காத்திருந்தது

செய்தி, “கவிதை களவாடப்பட்டது.”

கவிதையை களவாடியவர்
கவிதையின்
இறுதி வார்த்தையை மட்டும் எழுதிவிட்டு
காப்புரிமைப் பெற்றுக்கொண்டார்.

கவிதை என்ன்னுடையது
என்ன் காதல் கவிதை
என்றெல்லாம்
அழுது புலம்ப தோன்றியது.

புலம்பினேன்
எனக்கும் மட்டும் கேட்கும் படியாக
அழுதேன்
கண்ணீர் சிந்தாமல்
என் கவிதையின் பெயர்
கெட்டு விடக்கூடாது
என்பதற்காக

எழுதியவர் : சுதாகர் கதிரேசன் (26-Sep-13, 1:22 pm)
பார்வை : 144

மேலே