பூகம்பம்....

மாண்டு புதையுறும் காலமெல்லாம்
இன்று மாறியே போனதடா
மனிதர் மண்ணில் புதையுண்டு
மாளுகின்ற கொடுமை என்றானதடா!!!

எத்தனை உயிர்கள் பூகம்பத்தினால்
இங்கு மண்ணில் புதையுதடா.
ஐயோ இது என்ன கொடுமையடா
என்றழுதே மனமும் புலம்புதடா!!!

இயற்கையினையே கட்டி வைத்திட
இங்கொரு கருவியும் இல்லையடா
இப்படியே இது தொடருமென்றால்
மண்ணில் மானுடம் இல்லையடா!!!

பணம் காய்ச்சி மரமாய் நாட்டினில்
பூமியை வெட்டியே எண்ணைக் கிணறடா
தோண்டி... தோண்டி... எண்ணெய் எடுக்க
கோபத்தில் பூமியும் சரியுதடா!!!.

பூமி அன்னையின் நெஞ்சை பிளந்தே
அணுகுண்டு சோதனை அங்கங்கு நடக்குதடா
சினம் கொண்ட பூமியும்
அப்பாவி மக்களை உண்டு மகிழுதடா!!!

வேண்டாம்... வேண்டாம்...
இனி வேண்டவே வேண்டாம்
உயிர் போக்கிடும் அணுகுண்டு சோதனைகள்
அமைதி காத்திடும் வழிமுறை கண்டே
உலகினில் படைப்போம் சாதனைகள்!!!

எழுதியவர் : சொ. சாந்தி (26-Sep-13, 10:34 pm)
பார்வை : 101

மேலே