வறுமையின் நிறம் சிவப்பாம்
விடை இருந்தும்
வினாக்களாகி நிற்கிறது
விடை காண முடியாமல்
இளமை என்றும் இளமையானதால் ....!
வெட்டுபட்ட மூங்கில்கள்
ரணகீதங்கள் சுவாசிக்கின்றன
புல்லாங்குழல்களாக
மாற்றம் பெற்றதும்...!
பூக்களைத் தாங்கும்
முட்களே
வாழ்ந்து காட்டும்
வரலாறாய்...!
வரைந்து விட்டான்
சாலையோர ரவிவர்மன்
மழை வரும் எனத் தெரியாமல்
வறுமைச் சாலையில்...