இனி வேண்டாம் அநாதை

ஒரு வேளை கூழுக்கும் வழியில்லை
கும்பிட்ட கடவுளும் அருகிலில்லை
தெரு தெருவாக சுற்றுகிறோம்
அனாதையாக ......
உங்கள் அன்பைத்தான் கேட்கிறோம்
எங்கள் சொத்தாக .....

அனாதையாக பிறந்தது
எங்கள் தவறா ...?
அன்பிற்காய் ஏங்குவது
எங்கள் சாபமா ....?

பத்து திங்கள் சுமந்த தாய்
எங்களை சுமையாக நினைத்து விட்டால்
பாலூட்டி வளர்க்காமல்
குப்பை தொட்டியில் சேர்த்துவிட்டால்

எச்ச இலைகளை பொறுக்கி
உண்டோம்
ஏச்சு பேச்சு கேட்டு
சுரனை அற்ற கற்களாய் வளர்ந்தோம்

பூப்பெய்யுமுன்னரே பட்டுப்போனோம்
கல் சுமக்க போய் குழந்தை சுமந்தோம்
ஏனென்று கேட்க ஆளின்றி
தினமும் காலால் மிதி பட்டோம்

வெயிலுக்கு சுவைக்க
எங்கள் வியர்வையைக் கொடுத்தோம்
அரக்கர்கள் சுவைக்க
எங்கள் ஆடைகளை விலக்கினோம்

இத்தனையும் பட்டு மாடாய் உழைத்தோம்
உயர்ந்து நிற்க உண்மையாய் இருந்தோம்
சிறுவர்களாய் இருந்தும் சிரமப்பட்டோம்
சிந்தனையற்று சீரழிந்து போனோம்

இந்த வாழ்கை எங்களோடு போகட்டும்
புது யுகம் இனியாவது பிறக்கட்டும்
அநாதை என்ற சொல் அடியோடு ஒழியட்டும்
அன்போடு வாழும் சமூகம் நிலைக்கட்டும்

எழுதியவர் : (1-Oct-13, 1:44 pm)
பார்வை : 134

மேலே