+துளிப்பா கொஞ்சம் கசப்பா!+

வேணும்னே அடிப்பா
கதைபேசி முடிப்பா
அவ பிரிவெனக்கிருக்குதே ரொம்ப கசப்பா!

மனசாலே பாப்பா
லாலிபாப் கேப்பா
பொலம்பவிட்டு போனாலே என்னை தப்பா!

அவளில்லா நொடிப்பா
நினைச்சாலே விஷம்பா
தேம்பிதேம்பி அழுகுது இந்த உயிர்ப்பா!

அவளென்ன மணப்பா
இருந்தேனவ நினைப்பா
ஏமாற்றி போனஅவ நல்லா இருப்பா!

காதலொரு படிப்பா
ஆனேனிப்ப பொறுப்பா
கொஞ்சம் காதலிருந்தா எனக்காய்கண்ணீர் வடிப்பா!

எழுதியவர் : அ வேளாங்கண்ணி ‍‍‍ ‍‍‍‍‍‍‍ (2-Oct-13, 8:20 pm)
பார்வை : 97

மேலே