யாதுமாகி


வாச மிக்க மலர்களை கொண்டு
என் நெஞ்சில் வாசம் செய்து
என்மேல் காதல் கொண்டவளே-நீ
எங்கே வாசம் செய்கிறாய்!

அன்பு மொழி பேசும் தாயாக
பாச மொழி பேசும் தாரமாய்
மழலை மொழி பேசும் குழந்தையாய்
காதல் மொழி பேசும் காதலியாய்
ஈருயிரும் ஓர் உடலாய்-யாதுமாகி
என்மேல் காதல் கொண்டவளே-நீ
எங்கே? வாசம் செய்கிறாய்!

என் இதய தோட்டத்தில்
வாசம் செய்ய வேண்டிய நீ
மாற்றான் தோட்டத்து
மல்லிகையாய் எங்கே?-நீ
வாசம் செய்கிறாய்!

எழுதியவர் : navaneethan (6-Jan-11, 1:00 pm)
சேர்த்தது : navaneethan navaratnam
Tanglish : yathumaagi
பார்வை : 436

மேலே