சரியாப் போச்சு..!
எழுத்தாளர்; நீ படைத்தது சரியில்லையே....என்ன எழுதியிருக்க ..கையளாதனா எழுதியிருக்க ...?
(எழுத்தாளர் உருவில் இருந்த பிரம்மன் ); எனப்ப..?நான் படைச்சது சரியில்லையா?நல்லாதானே இருக்கு..
எழுத்தாளர்;கோணல் மாணலா இருக்கு ...
எ ..பிரம்மா; கையால் தானே எழுதினேன் ..கைகள் நல்லாதானே இருக்கு...
எழுத்தாளர்;கை இருந்து என்ன பிரயோசனம்...விரல் பிடித்து பேனாவால நல்லா எழுதனுமுள்ள ...
எ.பிரம்மா ;நா எதுக்கு எழுதணும் ..ஏற்கெனவே நல்லா எழுதி படைச்சனே...அப்புறம் என்ன ?
எழுத்தாளர்;நீ எதைச் சொல்லுற..?
எ.பிரம்மா; நீ என் படைப்பைத் தானே சொல்ற..?
எழுத்தாளர்..நா ...நீ எழுதுன கதையச் சொன்னேன்
எ.பிரம்மா;நா படைச்ச படைப்பல்ல சொல்றேயோன்னு நினச்சேன்...
எழுத்தாளர்; அடக் கடவுளே!
எ.பிரம்மா;ஏன் என்ன கூப்பிட்ட?
எழுத்தாளர் ;நா உன்ன கூப்பிடலையா?
எ.பிரம்மா;படைச்சவன் நான் தானே..அதான் கேட்டேன்..
எழுத்தாளர்; சரியப் போச்சு...அப்ப நீ யாரு?
எ.பிரம்மா; ம் ம் ம் ...நா உங்கப்பன் ...
எழுத்தாளர்; அய்யோ !அப்பாவா?கண் விழித்துப் பார்த்து ...இதெல்லாம் வெறும் கனவுதானா...
நிஜமாகக் கூடாதா? அடக் கடவுளே!
அப்பா; அங்க என்ன முனு முனுப்பு ...
மகன்; ஒன்னுமில்லப்பா...நா தூங்குறேன் ...
அப்பா;சரியாப் போச்சு ..! விடிஞ்சாப்புலதான் ...!