மௌனம் காக்கின்றேன்

ஒவ்வொரு நாளும்
துரத்துகின்றது
ஏதோ ஒரு சோகம்!
சில வேளைகளில்
எனக்கும் புரியவில்லை
வாழ்க்கை சொல்லும்
பாடங்களையும் தத்துவங்களையும்!
விழுந்து எழும் போது
உணர்கின்றேன் வாழ்ந்தவரை
வாழ்க்கைக்கு என்ன
அர்த்தம் என்று!
இதயம் என்பது இடம் மாறி
இருப்பதால் இப்போதெல்லாம்
மௌனம் காக்கின்றேன்
தனிமையில்................!!!!!!!!!