வசந்த கால பறவைகள்

வசந்த கால
பறவைகள் ஆனோம்
கல்லுரிச் சரணாலயத்தில்....!

வயது வந்த
குழந்தைகள் ஆனோம்
அங்கே வாழ்ந்திட்ட தருணத்தில்...!

பறந்து வந்த திசைகள் வேறு...!
பயணப்பட்ட இடங்கள் வேறு....!
ஆனாலும் ...!
பழகியிருந்த நாட்களெல்லாம்
ஒன்றாகதான் வாழ்ந்திருந்தோம்...!

எங்கெங்கோ சுற்றி திரிந்தாலும் ....!
மாலையில்
கூடுதேடி வரும் குருவி போல
காலையில்
நாங்கள் தேடி சென்றோம் கல்லூரியை....!

அந்த தருணங்களில் ....!

எங்களோடு
பேசி திரிந்த புறாக்கள்
இன்னும் பறந்து போகவில்லை ....!

நாங்கள்
பதித்த கால்தடங்கள்
இன்னும் மறைந்துபோகவில்லை ...!

நாங்கள்
வாழ்ந்தஅந்த நாட்களுக்கு
இன்னும் வயதாகவில்லை....!

அங்கே

கண்டு ரசித்த பூக்களுக்கு
இன்னும்
பொழுதாகவில்லை ....!

இன்பத்தில் சிரித்த....!
துன்பத்தில் அழுத ....!
நண்பன் கை அணைத்த....!
நம்பிக்கை கொடுத்த -அந்த
சுகமான நினைவுகள் எல்லாம்
நெஞ்சுக்குள்
இன்னும் பழுதாகவில்லை .....!

தோழன் பாடிய கீதம் ....!
தோழி கொடுத்த சாதம் ....!
"நட்புக்காக"
எங்கேயும் நடக்க துணிந்த பாதம்...!
இவையெல்லாம் தான்
நட்புக்குள்
நாங்கள் கண்ட வேதம்....!

தேசம் கடந்து ....!
இந்த உலகத்தில்
எத்தனை
நினைவு சின்னங்கள் இருந்தாலும்.....!
கல்லுரி நாட்களுக்கும் ....!
அங்கே
பதிவு செய்த
நினைவுகளுக்கும் தான்.....!
காலம் கடந்தும்
நம் கனத்த இதயத்தை கூட....!
கயிறு போட்டு இழுக்கும்
வலிமை இருப்பதாய் நான் உணர்கிறேன் ....!

தோழமையோடு
சுற்றி திரிந்த-அந்த
கல்லுரி நாட்கள்
ஓர் தொழிற்சாலை ....!

"நட்பி"னை "உற்பத்தி" செய்து
"நினைவு"களை "வியாபார"மாக்கி
"அன்புச்" சந்தையில்
அதிக "லாபம்" ஈட்டிக்கொண்டிருக்கிறோம் ....!

மொத்தத்தில் ...!

"கல்லுரி"

அழும்போது கிடைத்த
அன்னைமடி....!

இருவருக்குள் படரும்
"காதலை "விட
இறுதிவரை தொடரும்

"நட்பு"தான்

என்றுமே உயர்ந்தது பத்துபடி....!

எழுதியவர் : பாக்யா (7-Oct-13, 8:04 am)
பார்வை : 231

மேலே