இது ஒரு ஜீவனுள்ள காதல் போராட்டம்
ஆயிரம் பேர் எனைச் சுற்றி
இருந்தும் தனிமையிலே நான்
தாமரையே நீ என்
அருகில் இல்லாததால்
விரிந்து பரந்த மலைகளின்
மத்தியில் நான் இருந்தாலும்
விஸ்தாரமாய் பரவுகிறது உன்
நினைவுகள் என் நெஞ்சில்
நான் உணர்வது ஒன்று தான்
அது என் காதல் என்று தான்
களவும் கற்று மற என உரைப்பது
உண்மை தான் ஆனால்
காதல் கொண்டது உன்னை
மறப்பதற்கு அல்ல
நேசம் கொண்டு நினைப்பதற்கு