உடைந்தது என் நட்பு......

வேசங்களை கண்டு கண்டு
விசேச மானவன் விவேகமின்றி
வீதியிலே போனான்
சமயத்தின் பேர் சொல்லி
வேற்றுமை கண்டான்.

அத்தி பூ போல்
உள்ளத்தில் நட் பூக்க
சமயத்தையும் மறந்து
சடங்குகளை தகர்த்து
மனித நேயமிக்க நண்பர்கள் ஆனோம்

ஒரு தட்டில் உண்டு மகிழ்ந்தோம்
ஆடைகளையும் மாற்றி அணிந்தோம்
பண்டங்கள் மாற்றி மனமகிழ்ந்தோம்
பாகுபாடு ஏதுமின்றி பாசத்தில் பஞ்சமின்றி

அவன் ஞானகண் மறைந்து
நய வஞ்சக கண் திறக்க
ஜாதி சமய பற்று தளைத்தோங்க
தடம் புரண்டது கலங்கமில்லா என் நட்பு .

எழுதியவர் : மா.செபஸ்டின் (10-Oct-13, 1:33 pm)
பார்வை : 114

மேலே