உன்னை தேடி என் பயணம் கிறுக்கலாக 555

அழகே...

உன்னை முதல்
முறை கண்டேன்...

என்னை கடந்த மூன்று
வினாடிக்குள்...

உன் விழிகளுக்கு
ஓர் படைப்பு...

இரண்டாம் சந்திப்புக்கு
என்னை தேடி வந்த...

உன் பாதங்ககுக்கு
ஓர் படைப்பு...

உன்னை நேசிக்க
ஆரமித்தேன்...

சில படைப்புகள்...

உன்னை என் உயிராக
நினைத்தேன்...

பல படைப்புகள்...

நீ என்னை விட்டு
விலகியதும்...

உனக்காக என் படைப்புகள்
தொடர்ந்து கொண்டே...

நீ என்னை விட்டு
விலகியதும்...

உனக்காக நான் கிறுக்கிய
முதல் படைப்பு...

நித்தம் நூறு முறை
வாசிக்கிறேன் நான்...

என் கிறுக்கல்களை எல்லாம்
கவிதை என்கிறார்கள்...

என் நண்பர்கள்...

பெண்ணே...

உனக்கு படைக்க பட்ட
படைப்புதான் கவிதையா...?

கவிதை எழுத
தெரியாதவனடி நான்...

உன்னால் நித்தம் தொடர்ந்து
கொண்டே இன்று.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (11-Oct-13, 7:39 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 179

மேலே